மகனுக்கு தாய் எடுத்த நடுகல்:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி தாலுக்கா வாழைக்குறிச்சி சிவன் கோவில் ஊருணியில் இந்த சிற்பமும் கல்வெட்டும் உள்ளது. முதல் பலகையில் உள்ள சிற்பம் முன்பக்கம் நடந்து செல்வது போல் அமைந்துள்ளது. கால்கள் உடைந்துள்ளது அதில் எழுத்துக்கள் இல்லை. இரண்டாவது பலகையில் உள்ள கல்லில் இடுப்பிற்குமேல் உடைந்துள்ளது. அதில் கல்வெட்டு பொறிப்புள்ளது. இவ்வெழுத்துக்கள் 9ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. தமிழ்பேர் அதியரைசன்அடியான் மகன் என்பவர் ஏதோ ஒரு போரில் இறந்து படுகிறார். இறந்த மகனுக்கு அவன் தாயார் எழுப்பிய நடுகல்லே இது. தமிழ்பேரதியரசன் என்பவர் அப்பகுதியில் இருந்த முத்தரைய மன்னராய் கருதப்படுகிறார்! அவரது சேவகரின் மகனே இறந்துபட்ட வீரனாவார். தமிழகத்தில் கிடைத்த சிறப்பான நடுகற்களில் இதுவும் ஒன்று.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
P.c: Mirunalini Natarajan




No comments:
Post a Comment