Pages

Friday, 26 June 2020

மடம் காத்து பட்ட பிராமணர்

மடம் காத்து பட்ட பிராமணர்:

திருச்சி மாவட்டம் லால்குடி என அழைக்கப்படும் திருத்தவத்துறைக்கு அருகேயுள்ள ஊர் நன்னிமங்கலம். அன்று இவ்வூர் சென்னிவாய்க்கால் என அழைக்கப்பட்டது. சென்னி என்பது சங்ககால சோழர்களின் சிறப்புப்பெயர். கரிகாலனின் தந்தை பெயர் கூட சென்னி என்பதே. பிற்கால சோழர்காலத்தில் சென்னி என்ற பெயர் ஏனோ பயின்று வரவில்லை. சென்னி பெயரில் வாய்க்கால் அமைந்துள்ளதால் இவ்வூரின் தொன்மையை அறியலாம். இவ்வூரிலுள்ள ஓர் பழமையான சிவன்கோவிலில் இந்நடுகல் உள்ளது. இதில் சிறப்பம்சம் யாதெனில் பொதுவாய் நடுகல் போர்க்குடிகளுக்கும், வனவிலங்கிலிருந்து ஊரை காத்த வேட்டுவ, வேளான்குடிகளுக்கும் எழுப்புவர். முதன்முதலாய் பிராமணர் ஒருவருக்கு இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. அவ்வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சந்திமுற்றதேவன் எனும் பிராமனர் கோவில் மடத்தை அழிக்க நடக்கும் முயற்சியில் சண்டையிட்டு மடத்தை மீட்கிறார், ஆனால் அவர் மடத்தை மீட்கும் போரில் அவர் இறந்து விடுகிறார். அவர் மார்பில் அம்பு பாய்ந்துள்ளவாறு நடுகல் வடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எழுப்பப்ட்ட நடுகல்லே இது. இச்சம்பவம் இரண்டாம் நந்திவர்மனின் 21 ம் ஆட்சியாண்டில் நடைபெறுகிறது. அப்போது சிறிய கல்லை எழுப்பி வணங்கியிருக்க வேண்டும். அதன்பின் தற்போதைய நடுகல் சோழர் ஆட்சியில் 10 ம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது தெரிகிறது.
இந்டுகல் இன்றும் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறது.

No comments:

Post a Comment

முதல் பாண்டியர் நடுகல்

 முதல் பாண்டியர் நடுகல்: தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன கோட்டைப்போர் நடுகற்கள்  இருவகைப்படும், கோட்டைய...