முதல் பாண்டியர் நடுகல்:
தமிழக வரலாற்றில் கோட்டை போர் தொடர்பான சில நடுகற்கள் காண கிடைக்கின்றன
கோட்டைப்போர் நடுகற்கள் இருவகைப்படும், கோட்டையை அழிக்கும் முயற்சியில் இறந்த வீரர்களின் நினைவாகவும், கோட்டையை அழியாமல் காப்பாற்றி இறந்த வீரர்களின் நினைவாகவும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளது, இந்த கோட்டை போர்கள் மிகவும் கடினமாக அமையும், பகைவர்கள் தங்களது முழு படைப்பலத்தை பயன்படுத்தி கோட்டைகளை தகர்க்க முயற்சிப்பர், இதனால் பல கோட்டைகள் இவ்வகை போர்களால் அழிந்திருக்கக்கூடும்.
பல்லவர் காலத்தில் 6 ஆம் நூற்றண்டில் கோட்டைப்போர் பற்றிய நடுகல் குறிப்பு கிடைக்கிறது அதேபோன்று முற்கால பாண்டியர் அரசர் பராந்தகன் நெடுஞ்செழியன் உடைய ஆட்சிகாலம் கிபி 768-815 ஆகும் 27ஆம் ஆட்சியாண்டில்.
கிபி 795 ஆம் ஆண்டில் சேரமன்னரின் சேரபடை பாண்டியர்களின் கோட்டையான கரைக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட .
பாண்டிய படை வீரர்கள் தங்கள் உடைய கரைக்கோட்டை அழியாமல் காப்பாற்ற போர் புரிந்தனர், இந்த போரின்போது, பாண்டியர் அரசர் பராந்தகன் நெடுஞ்செழியன் மீது மிகுந்த அன்பு கொண்ட இரணகீர்த்தி என்ற வீரர் வீர மரணம் அடைகிறார்.
சேரர் படையை சேர்ந்த கொழுவூர் கூற்றத்தை சேர்ந்த பெருமூர் தாதம் பெருந்திணை என்ற வீரர் எய்த அம்பினால் இரணகீர்த்தி இறக்கிறார்.
இந்த கோட்டைபோரின் போது இரணகீர்த்தி உடன் மற்றொரு உள் வீட்டு சேவகர் வீரர் ஆன அமர்கழியும் இறந்து விடுகிறார்.
இரணகீர்த்தியும், அமர்கழியும் கோட்டையை அழியாமல் காப்பாற்றி பல சேர படை வீரர்களை வீழ்த்தி உள்ளனர் இந்த மாவீரர் இருவர்.
இந்த கோட்டை போர் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்தால், பராந்தக நெடுஞ்செழியன் சேரர்களின் சிறந்த துறைமுக பட்டினம நகரம் ஆன விழிஞம் கோட்டையை முற்றுகையிட்டு வெற்றி காண்கிறார், இந்த வெற்றியை பாண்டியர் சீவரமங்கல செப்பேடு பதிவு செய்கிறது
“ஆழி முந்நீர் அகல் வானத்து அகடு உறிஞ்சும்
பாழி நீண்மதில் பரந்தோங்கி பகலவனும் அகல ஓடும்
அணி அரணிதாகி மணியிலங்கு மதில் விழிஞம்”
பாண்டியர்களின் விழிஞம் கோட்டை முற்றுகைக்கு பதில் தாக்குதலாக சேரர்கள் பாண்டியர் வசமிருந்த கரைக்கோட்டை அழிக்க முயன்றுள்ளனர்.
பாண்டிய சேர பேரரசுகள் இடையே நடைபெற்ற மிக முக்கியமான வரலாற்று குறிப்புகளை தாங்கி நிற்கும் இந்த நடுகல் தற்போது கன்னியாகுமரி பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஶ்ரீ கோமாறஞ்சடையற்கு
27ம்மாண்டு சேரமானார்
படை விழுஞத்து புறத்துவிட்டுழக்கக
கரைக்கோட்டை அழிப்பான்
வர பெருமானடிகளுள
ன்பு மிக்குள இரணகீர்த்தியும்
அமர்கழியும் உள்வீட்டினொற்றைச்
சேவகர் கோட்டை அழியாமை
காத்தெறிந்து பலரும் பட்ட
இடத்து இரணகீர்த்தி
உள்வீட்டுச்சேவகன் கொழுவூர்க்
கூற்றத்துப் பெருமூர்த்தாதம்
பெருந்திளை அத்திரத்தாற்
பலரோடுங்
குத்திப்பட்டான் இருபது கமாளி
Write up : ஸ்ரீநிவாஸ்
#ஆற்றுப்படை #Aatrupadai #pandya


No comments:
Post a Comment