சிலப்பதிகாரம் கூறும் வீரன்:
இஸ்லாமிய ஜிகாதிகள், ஜப்பானிய ஹிரகரகள், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை இவற்களுக்கெல்லாம் முன்னோடி அக்காலத்தைய நவகண்ட, அரிகண்ட வீரர்கள்.
அடிப்படையில் இவர்கள் அனைவரும் ஒரே உளவியல் எண்ணங்களை கொண்டவர்களே! இப்பலியிடுதலை தொல்காப்பியம் 'அவிபலி' என்கிறது. சிந்துசமவெளியில் கிடைத்த முத்திரைகளில் கூட நரபலி குறித்த செய்திகள் கிடைக்கிறது
"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி"
( இந்திர விழவூரெடுத்த காதை -சிலப்பதிகாரம் )
"அடிக்கழுத்துடன் சிரத்தை அரிவராலோ
அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ.."
(கலிங்கத்துப்பரணி)
மேற்கண்ட இருபாடல்களும் வீரன் தன்தலையை அரிந்து கொற்வையின் முன் உள்ள பீடத்தில் வைப்பான் என்கிறது. எவ்வளவு மனஉறுதி பெற்றவனாய் இருப்பினும் வெட்டுண்ட தன்தலையை பீடத்தில் வைப்பது சாத்தியமா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் ஹம்பியில் உள்ள இந்த சிற்பத்தில் தன் இடக்கையில் தன்தலையை ஏந்தி நிற்கும் வீரன் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி காட்டும் வீரனை நினைவுறுத்துகிறான்.

No comments:
Post a Comment